search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை
    X

    அனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை

    மத்திய மந்திரி அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. #AnanthKumar #RIPAnanthKumar
    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள தனியார்  மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரம், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் (வயது 59) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அனந்த குமார் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அவருக்கு அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அனந்த குமாருக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, தேசிய கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. #AnanthKumar #RIPAnanthKumar
    Next Story
    ×