search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் - மோடி, அமித் ஷா பங்கேற்பு
    X

    டெல்லியில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் - மோடி, அமித் ஷா பங்கேற்பு

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. #ModiAmitShahattend #BJPCECmeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் பொதுத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.

    இதுதவிர, சில மாநில கட்சிகளை ஒன்றாக இணைத்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைப்பதற்காக சந்திரபாபு நாயுடு, மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு, தலைவர்களின் பிரசார யுக்தி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நடக்கும் இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். #ModiAmitShahattend #BJPCECmeeting
    Next Story
    ×