search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்- நாளை முதல்கட்டமாக 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு
    X

    சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்- நாளை முதல்கட்டமாக 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு

    சத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில் நாளை முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress
    ராய்ப்பூர், நவ. 11-

    சத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில் நாளை முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. #ChattsgarhAssemblyElections #FirstPhaseCampaign #BJP #Congress

    சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கரில் நாளை (12-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசம், மிசோரமில் வருகிற 28-ந்தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானாவில் டிசம்பர் 7-ந்தேதியும் தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது.

    சத்தீஸ்கரில் நாளை, முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அங்கு ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. மேலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தலைமையிலான ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



    சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 3 இடங்களில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் டி.வி. கேமராமேன் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்குசாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×