search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை போராட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது - கேரள ஐகோர்ட்டு கருத்து
    X

    சபரிமலை போராட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது - கேரள ஐகோர்ட்டு கருத்து

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சபரிமலையில் போராட்டம் நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. #KeralaHC #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் காலம் காலமாக 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்யும் உரிமையை வழங்கி உள்ளது. ஆனாலும் சபரிமலை கோவில் நடை திறக்கும்போதெல்லாம் அங்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை அவர்கள் தடுத்து திருப்பி அனுப்பி வருகிறார்கள். இதனால் போலீசாருக்கும், ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே மோதலும் உருவாகிறது.

    இந்த நிலையில் சபரிமலையில் போராட்டம் நடத்தியதாக திருப்புனித்துராவை சேர்ந்த கோவிந்த் மதுசுதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவர், தனக்கு ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். போலீஸ் சார்பில் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுசுதன் போராட்டம் நடத்திய காட்சி அடங்கிய வீடியோ பதிவையும் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு ஐகோர்ட்டு மதுசுதனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. மேலும் நீதிபதி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சபரிமலையில் போராட்டம் நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது. சபரிமலையில் போராட்டம் நடத்துவது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். இதுபோன்ற போராட்டங்களை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றார். #KeralaHC #Sabarimala
    Next Story
    ×