search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தெலுங்கானாவில் கணக்கில் வராத ரூ.7.5 கோடி பறிமுதல்
    X

    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தெலுங்கானாவில் கணக்கில் வராத ரூ.7.5 கோடி பறிமுதல்

    தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கணக்கில் வராத 7 கோடியே 51 லட்சம் ரூபாயை ஐதராபாத் போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். #unaccountedcash
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் நபர்களை பிடிக்க தேர்தல் கமிஷன் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஐதராபாத் பகுதிக்குட்பட்ட சைஃபாபாத் போலீசார் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்தின்பேரில் இன்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.



    மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த பணத்துக்கு உரிய வகையில் கணக்கு காட்டப்படாததால் அந்த வீட்டில் இருந்து 7 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் பணத்தை கடத்திவந்த வால்வோ கார், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இப்படி கணக்கில் வராத பணம் சுமார் 53 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவித்துள்ளார். #unaccountedcash #Telanganapolls
    Next Story
    ×