search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல் - 13 பேர் கொண்ட மூன்றாவது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
    X

    மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல் - 13 பேர் கொண்ட மூன்றாவது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 13 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. #MadhyaPradeshElections #Congress
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். 

    மத்தியப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, டிசம்பர் 11ம் தேதி நடைபெற்று அன்றைய தினமே, தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.



    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 13பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

    155 பேர் கொண்ட முதல் பட்டியலையும், 16 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலையும் காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #MadhyaPradeshElections #Congress
    Next Story
    ×