search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாயுடன் கைதான அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன்
    X
    தாயுடன் கைதான அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன்

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனுக்கு சூடு வைத்த தாய்

    கேரள மாநிலத்தில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளகாதலனுடன் சேர்ந்து சூடு வைத்த தாயை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் இடிக்கி மாவட்டம் அங்கமாலியை சேர்ந்தவர் குரியா கோஸ். இவரது மனைவி அசாமோல் (வயது 30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்துவேறுபாட்டால் கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். மகன் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவ அதிகாரியாக உள்ளவர் ராதாகிருஷ்ணன் (33). இவருக்கும் அசாமோலுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனையடுத்து எர்ணாகுளம் காக்கநாட்டில் உள்ள டாக்டர் வீட்டில் வேலைக்காரி போல் சேர்ந்தார்.

    தாயுடன் சென்று சிறுவனை டாக்டர் ராதாகிருஷ்ணன் கொடுமைபடுத்த தொடங்கினார். சிறுவனின் மர்ம உறுப்பில் சூடு வைப்பது, கிள்ளி துன்புறுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார். உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதால் இதனை தாய் கண்டு கொள்ளவில்லை. மர்ம உறுப்பில் சூடு வைக்கும்போது சிறுவன் அலறி சத்தம்போடுவான். அக்கம் பக்கத்தினர் கேட்டால் சிறுவனுக்கு சற்று மனநலம் சரியில்லை என்று கூறி தாயும், டாக்டரும் கூறி சமாளித்து விடுவார்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் சிறுவனின் மர்ம உறுப்பில் டாக்டர் சூடு வைத்தார். வலி தாங்க முடியாமல் சிறுவன் வெளியே தப்பி ஓடி வந்து அங்குள்ள பொதுமக்களிடம் இது குறித்து கூறி கதறி அழுதான்.

    அக்கம் பக்கத்தினர் இது குறித்து திருக்காகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுவனை மீட்ட போலீசார் எர்ணாகுளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து தெரியவந்ததும் கள்ளக்காதல் ஜோடி தலைமறைவானது. திருக்காகரை உதவி கமி‌ஷனர் சம்சின் சிறுவனை துன்புறுத்திய அசாமோல் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் மைசூரில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து மைசூர் சென்று போலீசார் அசாமோல் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனை கைது செய்து கேரள அழைத்து வந்தனர். இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர். #tamilnews
    Next Story
    ×