search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகம் - பெல்லாரி உள்பட ஐந்து தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
    X

    கர்நாடகம் - பெல்லாரி உள்பட ஐந்து தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

    கர்நாடகத்தில் மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகள் என மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. #KarnatakaBypoll
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர்.



    இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.

    பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #KarnatakaBypoll
    Next Story
    ×