search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
    X

    முத்தலாக் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

    முத்தலாக் தடை சட்டத்தில் தலையிட முடியாது என்றும் விரைவில் தொடங்க இருக்கும் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பாக அணுகலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் யோசனை தெரிவித்துள்ளது. #Muthalaq #SC
    புதுடெல்லி:

    முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் முன்றுமுறை வாய் மொழியாக தலாக் சொல்லி விவாகரத்து பெறுவது நடைமுறையில் இருந்து வந்தது. இதற்கு சில முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது.

    இதையடுத்து மத்திய அரசு முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு முன்பாக அவசர சட்டமாக அமல்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முத்தலாக் தடை சட்டத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று மறுத்து விட்டது.விரைவில் தொடங்க இருக்கும் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பாக அணுகலாம் என்று யோசனை தெரிவித்தனர். #Muthalaq #SC
    Next Story
    ×