search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா காங்கிரசில் இணைந்தார்
    X

    ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா காங்கிரசில் இணைந்தார்

    ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். #congress #MadhuKoda
    சாய்பாசா:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர் மதுகோடா. முதலமைச்சராக பதவியேற்ற மூன்றாவது சுயேட்சை உறுப்பினர் என்ற பெருமையை பெற்ற இவர், இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அஜோய் குமார் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். 

    நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மது கோடா பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். இதேபோல் மற்றொரு நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கும் அவர் மீது உள்ளது. அமர்கோண்டா முர்காதங்கல் நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் ஜிண்டால் ஸ்டீல் மற்றும் ககன் ஸ்பாஞ்ச் அயர்ன் நிறுவனங்களுக்கு  சாதகமாக செயல்பட்டதாக மது கோடா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    கடந்த மாதம் மது கோடாவின் மனைவியும் எம்எல்ஏவுமான கீதா கோடாவும் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. #congress #MadhuKoda
    Next Story
    ×