search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய நிறுவனங்கள் எவை? - நிர்மலா சீதாராமன் விளக்கம்
    X

    ரபேல் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய நிறுவனங்கள் எவை? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

    ரபேல் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய நிறுவனங்கள் எவை? என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். #NirmalaSitharaman #Rafaledeal
    மும்பை:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் (ஆப்செட் பார்ட்னர்) நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டதிலும் ஊழல் நடந்திருப்பதாக போர்க்கொடி தூக்கி இருக்கின்றன.

    இந்த நிலையில் மும்பையில் நேற்று நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் ஒப்பந்தத்தில் இணையும் இந்திய பங்குதாரர் நிறுவனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ரபேல் விமானம் வினியோகத்தில் டசால்ட் நிறுவனமும், 2 அல்லது 3 இந்திய நிறுவனங்களும் பங்கேற்கின்றன. முதலீடு சார்ந்தோ, உதிரி பாகங்களை வாங்கவோ அல்லது சேவைக்காகவோ எத்தனை எண்ணிக்கையிலும் இந்திய பங்குதாரர் நிறுவனங்களை இணைத்துக் கொள்வது டசால்ட்டின் விருப்பத்தை சார்ந்தது. ரபேல் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டு உள்ள இந்திய பங்குதாரர் நிறுவனங்களிடம் இருந்து எந்த வகையான (முதலீடு, உதிரிபாகங்கள்) சேவையை பெற்றுக்கொண்டோம் என, ரசீதுடன் என்னை அணுகும்போதுதான் அந்தந்த நிறுவனங்கள் குறித்த விவரங்கள் தெரியவரும். அதுவரை ரபேல் ஒப்பந்தத்தில் எத்தனை இந்திய பங்குதாரர் நிறுவனங்களுடன் டசால்ட் நிறுவனம் இணைந்து செயல்படுகிறது என்ற விவரங்களை என்னால் கூற முடியாது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். #NirmalaSitharaman #Rafaledeal


    Next Story
    ×