search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிடத்தில் பாலியல் பலாத்காரம் - விசாரணை அமைப்பை பலப்படுத்த மத்திய மந்திரிகள் குழு
    X

    பணியிடத்தில் பாலியல் பலாத்காரம் - விசாரணை அமைப்பை பலப்படுத்த மத்திய மந்திரிகள் குழு

    பணியிடத்தில் பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கும் கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைக்க ராஜ்நாத் சிங் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. #GoM #sexualharassment #workplacesexualharassment
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பெண்கள் சந்தித்துவரும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான #மீடூ பிரச்சாரம் தற்போது வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக, ஒரு பெண் பத்திரிகையாளர் மத்திய இணை மந்திரி எம்.ஜே. அக்பர் மீது அளித்த புகாரால் அவர் மந்திரி பதவியை துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

    இப்படி பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் மகளிர் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், பணியிடத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்கவும், தெரிவிக்கப்படும் புகார்கள் தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கும் கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக வலுவான நெறிமுறைகளை பரிந்துரைக்கவும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் 9 நபர்கள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். #GoM #sexualharassment  #workplacesexualharassment 
    Next Story
    ×