search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை
    X

    தமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை

    தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. #Potato
    புதுடெல்லி:

    இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது.

    நுண்ணிய ஒட்டுன்னி மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

    இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இந்த 4 மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விதை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    4 மாநிலங்களில் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இருக்காது. பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Potato
    Next Story
    ×