search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் ரெயில் விபத்து - மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
    X

    பஞ்சாப் ரெயில் விபத்து - மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AmritsarTrainAccident
    புதுடெல்லி:’

    பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற தசரா விழாவின்போது ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்குமாறு முதல்மந்திரி அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று அம்மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை இறந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கினார்.



    இந்நிலையில், இந்த விபத்து குறித்து மாநில அரசும், ரெயில்வே வாரியம் மற்றும் ரெயில்வே அமைச்சகம் ஆகியவை 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று  உத்தரவிட்டுள்ளது. #AmritsarTrainAccident
    Next Story
    ×