search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரிதாநாயர் பாலியல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன் - உம்மன்சாண்டி பேட்டி
    X

    சரிதாநாயர் பாலியல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன் - உம்மன்சாண்டி பேட்டி

    சரிதாநாயர் பாலியல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று உம்மன்சாண்டி கூறியுள்ளார். #OommenChandy #SarithaNair

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டார்.

    உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போது இந்த மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக சரிதாநாயார் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் கூறும்போது, உம்மன்சாண்டி மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜரான சரிதாநாயர், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் உம்மன்சாண்டி ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பின்னர் இந்த வழக்கு மீண்டும் வேகம் எடுத்தது.

     


    இப்போது இந்த வழக்கு தொடர்பாக சரிதாநாயர் மீண்டும் கேரள குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் இவர்கள் இருவர் மீதும் கேரள குற்றப்பிரிவு போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக உம்மன்சாண்டி கூறும்போது, சரிதா நாயர் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கேரளாவில் அய்யப்பன் கோவில் விவகாரத்தில் கம்யூனிஸ்டு அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். மக்களை திசை திருப்ப இந்த விவகாரத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதற்கு நாங்கள் கோர்ட்டு மூலம் உரிய பதில் அளிப்போம், என்றார்.

    இதுபோல கேரள எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார். #OommenChandy #SarithaNair

    Next Story
    ×