search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு நகராட்சி தேர்தல் - அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி
    X

    ஜம்மு நகராட்சி தேர்தல் - அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 43 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் 14 இடங்களை பிடித்துள்ளது. #JammuMunicipalBoard #BJPwon43seats
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

    இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. இதில் ஜம்மு நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    ஜம்மு நகராட்சியில் மொத்தமுள்ள 75 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 43  இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 14 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். #JammuMunicipalBoard #BJPwon43seats
    Next Story
    ×