search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் 14 மாத குழந்தையை சீரழித்த காமுகன் பீகாரில் கைது
    X

    குஜராத்தில் 14 மாத குழந்தையை சீரழித்த காமுகன் பீகாரில் கைது

    குஜராத் மாநிலத்தில் 14 மாத குழந்தையை சீரழிக்கப்பட்டதால் இந்தி பேசும் சுமார் 20 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற காரணமாக இருந்த காமுகனை போலீசார் பீகாரில் கைது செய்தனர். #14montholdgirl #14montholdgirlRapist #Gujarat14montholdgirl #Rapistarrested
    பாட்னா:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியது.

    அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றது.

    குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

    இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். வடமாநிலத்தவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், சபர்கந்தா சபர்கந்தா மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமத்தில் 14 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய காமுகனை குஜராத் மாநில போலீசார் தேடி வந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கிருந்து தப்பிச்சென்று, பல்வேறு ஊர்களில் சுற்றித்திரிந்த அந்த குற்றவாளி பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு தற்போது வந்துள்ளதாக குஜராத் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    உடனடியாக பீகாருக்கு சென்ற குஜராத் போலீசார் அங்கு தன்சோய் காவல் நிலையை எல்லைக்குட்பட்ட பகுதியில் அவனை நேற்றிரவு கைது செய்தனர். கைதான காமுகனின் பெயர் அனில் குமார்(22) என தெரிவித்த போலீசார், மேல் விசாரணைக்காக அவனை குஜராத் அழைத்து வந்துள்ளனர். #14montholdgirl  #14montholdgirlRapist #Gujarat14montholdgirl #Rapistarrested
    Next Story
    ×