search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல்- 42 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டி
    X

    மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல்- 42 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டி

    மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 42 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MPAssemblyPolls #Congress
    போபால்:

    230 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.

    மறுபுறம் காங்கிரசும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை காங்கிரஸ் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் பிரசார வியூகம் அமைத்து செயல்படுகிறது. 

    தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 70 முதல் 80 பேருக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.

    இந்நிலையில், 57 உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, 42 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்க தயாராக உள்ளது. 42 எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என நிர்வாகி ஒருவர் கூறினார். சரியான காரணம் எதுவும் இல்லாமல் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பதை மாநில தலைவர் கமல் நாத் விரும்பவில்லை. 

    71 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MPAssemblyPolls #Congress
    Next Story
    ×