search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் முத்தலாக்கிற்கு இடமில்லை என பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்  - அமித் ஷா
    X

    இந்தியாவில் முத்தலாக்கிற்கு இடமில்லை என பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார் - அமித் ஷா

    முத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். #PMModi #AmitShah #tripletalaq
    போபால் :

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைவதை தொடர்ந்து அம்மாநிலத்திற்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சாட்னா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித் ஷா கூறியதாவது:-

    இஸ்லாமிய சகோதரிகளின் நலனில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டவில்லை. முத்தலாக் போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் கிடையாது. பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னுரிமையை பற்றி பேசுவதோடு மட்டும் இல்லாமல் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் பாஜக செய்து வருகிறது.  

    மத்திய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் , நிர்மலா சீதாராமன் என உயரிய பொறுப்புகளில் பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையில் மட்டும் 9 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். #PMModi #AmitShah #triple talaq         
    Next Story
    ×