search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானை புகழும் சித்து, பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேரலாம் - பாஜக கருத்து
    X

    பாகிஸ்தானை புகழும் சித்து, பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேரலாம் - பாஜக கருத்து

    பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேர்ந்து கொள்ளலாம் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. #BJP #PakistanCabinet

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் நவ்ஜோத்சிங் சித்து.

    ஓய்வுக்கு பிறகு டெலிவி‌ஷன் வர்ணனையாளராக இருந்த அவர் அரசியலுக்கு சென்றார். தற்போது காங்கிரசில் இருக்கும் சித்து பஞ்சாப் மாநில அரசில் கலாச்சார துறை மந்திரியாக இருக்கிறார்.

    இந்த நிலையில் தமிழக கலாச்சாரத்தையும், பாகிஸ்தான் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு சித்து பேசினார். இமாச்சல பிரதேச மாநிலம் கசோலியில் நடந்த இலக்கிய திருவிழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் கலாச்சாரம் மொழி, உணவுகள் எனக்கு ஒத்து வராது. என்னால் தினமும் இட்லி சாப்பிட இயலாது. ஆனால் பஞ்சாப் கலாச்சாரமும், பாகிஸ்தான் கலாச்சாரமும் மொழியும், உணவு பழக்க வழக்கமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதனால் தென் இந்தியாவை விட பாகிஸ்தான் மக்களுடன் வாழ்வது எனக்கு எளிதானது.

    இவ்வாறு சித்து பேசினார்.

    சித்துவின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

     


    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பத் பத்ரா இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேர்ந்து கொள்ளலாம். அதுதான் அவருக்கு எங்களுடைய கனிவான அறிவுரையாகும்.

    சித்து தனது பேச்சில் தென் இந்தியாவை விட பாகிஸ்தான் உயர்ந்தது எனது தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. நாட்டை தென் இந்தியா, வட இந்தியா என்று பிரிப்பதே காங்கிரசின் சதி திட்டமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான ஜி.வி.எல். நரசிம்மராவ் இது தொடர்பாக கூறியதாவது:-

    சித்துவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு தென் இந்தியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். மேலும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்று அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டியணைத்து சித்து ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்தார். தற்போது அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். #BJP #PakistanCabinet

    Next Story
    ×