search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முதல் தங்கச் செங்கல் வைப்பேன் - மாமன்னர் பாபரின் வாரிசு பேட்டி
    X

    அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முதல் தங்கச் செங்கல் வைப்பேன் - மாமன்னர் பாபரின் வாரிசு பேட்டி

    அயோத்தியில் ராமர் கோயிலை விரைவில் கட்ட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான முதல் தங்கச் செங்கல்லை நான் வைப்பேன் என மாமன்னர் பாபரின் வாரிசு யாகூப் ஹபிபுதீன் தெரிவித்துள்ளார். #descendantofBabur #AyodhyaTemple
    லக்னோ:

    இந்தியாவில் மொகலாய ஆட்சிக்கு வித்திட்டு சுமார் 300 ஆண்டுகள் நாட்டின் பல பகுதிகளை ஆட்சி செய்த மன்னர் பாபரின் வாரிசு என்று தன்னை அடையாளப்படுத்திவரும் இளவரசர் யாகூப் ஹபிபுதீன் துசி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.

    இந்நிலையில், அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வலியுறுத்துவேன் என்று அவர் இன்று தெரிவித்துள்ளார்.

    ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் இந்து - முஸ்லிம்களிடையே எவ்வித சர்ச்சையும் இல்லை. அரசியல்வாதிகள் தான் இந்த பிரச்சனையில் மக்களை குழப்புகிறார்கள். சர்வ அதிகாரங்களும் படைத்த ஜனாதிபதியால் எந்த கோர்ட் தீர்ப்பிலும் தலையிட முடியும். ராமர் கோயிலை உடனடியாக கட்ட வேண்டும் என்று அவரை சந்தித்து வலியுறுத்துவேன்.

    தேவைப்பட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணியின்போது தங்கத்தால் ஆன முதல் செங்கல்லை அங்கு வைக்க நான் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கடந்த ஆண்டில் பாபர் மசூதி எனக்கே சொந்தம். எனவே என்னை அதன் பொறுப்பாளராக நியமிக்க சன்னி வகுப்பு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உத்தரபிரதேச சிறுபான்மை நலத்துறை மந்திரி சவுத்ரி லட்சுமி நாராயணனை சந்தித்து மனு அளித்து உள்ளேன். என்னை பொறுப்பாளராக நியமிக்காவிட்டால் கோர்ட்டுக்கு சென்று என்னுடைய உரிமையை நிலை நாட்டுவேன் என யாகூப் ஹபிபுதீன் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். #descendantofBabur  #AyodhyaRamTemple #AyodhyaTemple
    Next Story
    ×