search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேசத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சமாஜ்வாதி கட்சி
    X

    மத்திய பிரதேசத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சமாஜ்வாதி கட்சி

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட இன்றே, 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
    போபால்:

    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.



    இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்திருந்தார்.

    இதன் அடுத்தகட்டமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். சித்தி மாவட்டம் சித்தி 77 தொகுதியில் கே.கே. சிங் என்ற வேட்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், பரஸ்வடா மாவட்டம் பாலகட் 110 தொகுதியில் கன்கர் முன்ஜார் போட்டியிடுவதாகவும், பாலகட் 111 தொகுதியில் அனுபா முன்ஜார் என்பவரும், நிவாரி பகுதியின் டிகம்பர் 46 தொகுதியில் மீரா யாதவ்வும், பன்னா பகுதியின் பன்னா 60 தொகுதியில் தர்ஷத் சிங் யாதவ்வும், புத்னி பகுதி செஹோர் 156 தொகுதியில் அசோக் ஆரியா ஆகியோரை வேட்பாளர்களாக நியமித்து சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
    Next Story
    ×