search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியானாவில் தாய் மற்றும் மகள் பாலியல் வன்புணர்வு - 7 போலீசார் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    அரியானாவில் தாய் மற்றும் மகள் பாலியல் வன்புணர்வு - 7 போலீசார் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு

    அரியானா மாநிலத்தில் தாய் மற்றும் மகளை பாலியல் வன்புணர்வு செய்த புகாரில் 7 போலீசார் அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #POCSO
    சண்டிகர் :

    அரியானா மாநிலம், கைதால் மாவட்டத்தில் உள்ள சர்பஞ் எனும் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை 7 போலீசார் உள்பட 18 பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமி புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி(16) காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    துணை காவல் ஆய்வாளர் ஒருவருடன் சேர்ந்து தலைமை காவலர் மற்றும் காவலர் அந்தஸ்தில் உள்ள 7 போலீஸ் அதிகாரிகள் கடந்த மாதம், தாயை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், அவரது மகளையும் சீரழித்துள்ளனர். பின்னர் இன்னும் 9 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என சிறுமியின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    சமீபத்தில் அரியானா மாநிலத்தில், சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தாயையும் மகளையும் போலீஸ் அதிகாரிகளே வன்புணர்வு செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #POCSO
    Next Story
    ×