search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகலா? நடிகை குத்து ரம்யா மறுப்பு
    X

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகலா? நடிகை குத்து ரம்யா மறுப்பு

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவல்களுக்கு குத்து ரம்யா மறுப்பு தெரிவித்துள்ளார். #Ramya #Congress
    பெங்களூரு:

    ‘குத்து’ படத்தில் அறிமுகமான நடிகை ரம்யா காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளராக உள்ளார்.

    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை குத்து ரம்யா ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் “பிரதமர் மோடியின் மெழுகு சிலை உருவப்படத்தில் இந்தியில் திருடன் என்ற பொருள்படும் வார்த்தையை பதிவு செய்து இருந்தார்”. லக்னோவைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் உத்தரப்பிரதேச மாநில போலீசார் நடிகை குத்து ரம்யா மீது ஐ.டி. சட்டப்பிரிவு 67 மற்றும் சட்டப்பிரிவு 124-ஏ.வின் கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நடிகை குத்து ரம்யா டுவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் பரவின.

    இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ‘காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர்’ என்ற வரி நீக்கப்பட்டு உள்ளது. நான் தற்போது விடுமுறையில் உள்ளேன். விரைவில் ஊருக்கு திரும்புவேன். நான் காங்கிரசில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவல் தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #ramya
    Next Story
    ×