search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சி அதிகாரம் இல்லாத விரக்தியில் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது - நிர்மலா சீதாராமன்
    X

    ஆட்சி அதிகாரம் இல்லாத விரக்தியில் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது - நிர்மலா சீதாராமன்

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த தவறும் நடக்கவில்லை, ஆட்சி அதிகாரம் இல்லாத விரக்தியில் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது என்று மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். #NirmalaSitharaman
    பெங்களூரு:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த தவறும் நடக்கவில்லை, ஆட்சி அதிகாரம் இல்லாத விரக்தியில் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது என்று மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தினமும் கூறுகிறது. எங்கு பார்த்தாலும் பத்திரிகையாளர்கள் இது பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். ஊழல் நடைபெற்றதாக சொல்வது தவறானது. ராகுல் காந்தி சொல்வது போல் எந்த ஊழலும் நடைபெறவில்லை. இந்த ஒப்பந்தத்தில் எச்.ஏ.எல். நிறுவனத்தை நீக்கியதால், ஏராளமான வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

    முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போதும் எச்.ஏ.எல். நிறுவனம் அதில் இடம் பெறவில்லை. அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் இடம் பெற்றதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அப்படி இருக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறது. அக்கட்சி நீலிக்கண்ணீர் வடிக்கிறது. எங்கள் அரசை குறை சொல்வதற்கு முன்பு, தனது நிலை என்ன என்பதை காங்கிரஸ் பார்க்க வேண்டும்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் பா.ஜனதா சிறப்பான முறையில் ஆட்சியை நடத்தி வருகிறது. இதுவரை ஒரு ஊழல் புகார் கூட எங்கள் மீது இல்லை. ஆட்சி அதிகாரம் இல்லாததால், காங்கிரஸ் கட்சி விரக்தியடைந்து எங்கள் அரசு மீது ஆதாரங்கள் இன்றி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.

    பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் எனக்கு ஓட்டுரிமை உண்டு. ஆனால் துல்லிய தாக்குதல் தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருந்ததால், இந்த தேர்தலில் பங்கேற்க இயலாது என்பதை நான் முன்கூட்டியே கட்சி தலைவர்களிடம் தெரிவித்துவிட்டேன். சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவிலேயே நடக்கிறது. இது பெருமைக்குரிய விஷயம் ஆகும். தங்கள் மாநிலத்தில் விமான கண்காட்சியை நடத்துமாறு உத்தரபிரதேச அரசு கேட்டது உண்மை தான். இதுபோல் யாரும் கேட்கக்கூடாது என்று இல்லை.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    முன்னதாக சமூக வலைதளம் குறித்த மாநாடு பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பெங்களூருவுக்கு வந்த மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை, விமானப்படை அதிகாரிகள் வரவேற்ற காட்சி.


    மத்திய அரசு அமல்படுத்தும் திட்டங்களின் பயன் மக்களுக்கு போய் சேர வேண்டும். நமக்கென்ன என்று மக்கள் இருக்கக்கூடாது. நமது நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பு முக்கியமாக தேவைப்படுகிறது.

    எம்.பி.க்களின் ஆதர்ஷ திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன. எல்லா பகுதிகளும் பாரபட்சமின்றி வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆதர்ஷ கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே கிராமங்களை தேர்ந்தெடுத்து, அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கிறார்கள்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். #NirmalaSitharaman

    Next Story
    ×