search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி, ஆயுஷ்மான் திட்டத்துக்கு வெறும் 40 ரூபாயா? - ராகுல் கேள்வி
    X

    அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி, ஆயுஷ்மான் திட்டத்துக்கு வெறும் 40 ரூபாயா? - ராகுல் கேள்வி

    மக்கள் பணத்தில் இருந்து அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளித்தந்த பிரதமர் மோடி ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்துக்கு வெறும் 40 ரூபாய் ஒதுக்கியதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Rahulattack #AyushmanBharat
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு  1 லட்சத்து 30 ஆயிரம் கோடி லாபம் கிடைக்க பிரதமர் மோடி உதவி செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கிவைத்த ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மக்கள் பணத்தில் இருந்து அம்பானிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளித்தந்த பிரதமர் மோடி ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு வெறும் 40 ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    50 கோடி இந்தியர்களுக்கு மருத்துவ காப்பீடாக ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்றால் ஒருவருக்கு 40 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு என்பது, பிரதமரை வெளிச்சப்படுத்தும் விளம்பர யுக்தி. இது ஏழை மக்களுக்கான லாலிபாப் திட்டமாகும்.

    நாட்டு மக்களுக்காக அரசு கஜானாவை மோடி எப்போது திறக்கப் போகிறார்?  எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். #Rahulattack #AyushmanBharat
    Next Story
    ×