search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி விவகாரம் - அறிக்கை வெளியிட்டது ஆர்.எஸ்.எஸ்.
    X

    அயோத்தி விவகாரம் - அறிக்கை வெளியிட்டது ஆர்.எஸ்.எஸ்.

    அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான மறுஆய்வு விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் 29-ம் தேதி முதல் விசாரிக்கும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்றுள்ளது. #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt #RSS
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பகுதி யாருக்கு சொந்தம்? என்ற பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் ஒன்றான இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1994-ல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.



    இந்த தீர்ப்பை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மறுஆய்வு செய்ய வேண்டும் என இஸ்லாமியர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை அக்டோபர் 29-ம் தேதி முதல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரித்து தீர்ப்பளிக்கும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில், இந்த தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்றுள்ளது. மேலும், அயோத்தி விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெற்று உடனடியாக தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவதாகவும் ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt #RSS
    Next Story
    ×