search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    நவராத்திரி பிரம்மோற்சவம் - திருப்பதி கோவிலில் சிபாரிசு கடிதங்களுக்கு அனுமதி இல்லை

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி அக். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டுவரும் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

    அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய பவனில் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (அக்டோபர்) நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இது, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். தற்போது தமிழ் புரட்டாசி மாதம் பிறந்துள்ளது.

    எனவே ஏழுமலையான் கோவிலில் 29, 30-ந்தேதிகளிலும், அக்டோபர் மாதம் 6, 7, 13, 14, 20, 21-ந்தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படும். மேற்கண்ட நாட்களில் புரோட்டோக்கால் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    அக்டோபர் மாதம் 6, 13-ந்தேதி புரட்டாசி மாத சனிக்கிழமையாக இருப்பதாலும், 20-ந்தேதி ஐப்பசி மாத சனிக்கிழமையாக இருப்பதாலும் ஸ்ரீவாரிமெட்டு மற்றும் அலிபிரி ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக திருமலைக்கு நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கான திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்குவது ரத்து செய்யப்படுகிறது.

    அக்டோபர் மாதம் 14-ந்தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கருட சேவை நடப்பதால் டைம் ஸ்லாட் முறையிலான இலவச தரிசனம், திவ்ய தரிசன அனுமதி சீட்டு, 300 ரூபாய் டிக்கெட் ஆகியவை வழங்குவது ரத்து செய்யப்படுகிறது.

    கருட சேவை முடிந்ததும் மறுநாள் 300 ரூபாய் டிக்கெட் குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும்.

    குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட் வழங்குவதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்திலும் எந்தவித குளறுபடிகளும் நடக்கவில்லை. பக்தர்களின் ஆதார் எண்ணை சிலர் மோசடியாக பயன்படுத்தியே தில்லு முல்லு செய்கிறார்கள். போலி ஆதார் எண்ணை பயன்படுத்தி குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டில் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

    ஆர்ஜித சேவை டிக்கெட்டில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட்டில் யாரேனும் முறைகேடுகள் செய்தால், சம்பந்தப்பட்ட பக்தர்களே நேரில் வந்து போலீசில் புகார் செய்யலாம். பக்தர்கள் தாங்கள் பெற்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முதலில் அசல் டிக்கெட்டா அல்லது முறைகேடாக பெற்ற டிக்கெட்டா? என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TirupatiTemple


    Next Story
    ×