search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
    X

    அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

    அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. #suprecourt #scstact

    புதுடெல்லி:

    அரசு பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு பயன்கள் பெறுவதற்கு சில நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2006-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் விதித்து இருந்தது.

    இந்த தீர்ப்பை மறுபரி சீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அரசு பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. #suprecourt #scstact

    Next Story
    ×