search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாலத்தீவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இப்ராகிம் முகமதுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    மாலத்தீவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இப்ராகிம் முகமதுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

    மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமதுவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். #Maldivespolls #IbrahimMohamedSolih #PMModi
    புதுடெல்லி :

    1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலத்தீவில் சமீப காலமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. முன்னாள் அதிபர் முகமது நஷீத்தை, தற்போதைய அதிபர் அதிபர் யாமீன் அப்துல் கயூம் கைது செய்து சிறையில் அடைத்ததார். அவரை விடுதலை செய்ய அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதை அதிபர் யாமீன் அப்துல் ஏற்காததால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, மாலத்தீவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அங்கு கடந்த 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூம், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வருகிற முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போடியிட்டார்.

    ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், தேர்தல் முறையாக நடத்தப்படாவிட்டால், பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தன. இதனால், உலக நாடுகளின்  நெருக்கடிக்கு மத்தியில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

    இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் சமீப காலமாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள சூழலில், இந்தியாவும் இந்த தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக உற்று நோக்கியது.

    இதில், துவக்கத்தில் இருந்தே அதிபர் அப்துல்லா யாமீன் பின்னடைவை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த இப்ராகீம் முகம்மது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். மொத்த வாக்காளர்களில் 58.3 சதவீத வாக்குகள் பெற்று இப்ராகீம் முகம்மது வெற்றி பெற்றதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், வெற்றி பெற்றா இப்ராகிம் முகமதுவிற்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது.

    புதிய அதிபராக தேர்வாகியுள்ள இப்ராகிம் முகமதுவை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். இப்ராகிம் தலைமையில் மாலத்தீவில் ஜனநாயகம் மற்றும் அமைதியை வலுப்பெற வேண்டும் என பிரதமர் மோடி அவரது நல்விருப்பங்களை தெரிவித்தார்.

    மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த இப்ராகிம் முகமது, இருநாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவேன்   என கூறினார். #Maldivespolls  #IbrahimMohamedSolih #PMModi
    Next Story
    ×