search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள பாதிரியார் முல்லக்கல் விவகாரம் - போராடிய கன்னியாஸ்திரி மீதான நடவடிக்கைகள் வாபஸ்
    X

    கேரள பாதிரியார் முல்லக்கல் விவகாரம் - போராடிய கன்னியாஸ்திரி மீதான நடவடிக்கைகள் வாபஸ்

    கேரள மாநிலத்தில் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி போராடிய கன்னியாஸ்திரி மீது தேவாலயம் எடுத்திருந்த ஒழுங்கு நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. #Kerala #KeralaNun
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

    பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் பலர் கேரள உயர்நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சமீபத்தில் கேரள பாதிரியார் கைது செய்யப்பட்டு தற்போது அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    பாதிரியார் கைது செய்யப்பட்ட உடனே, கன்னியாஸ்திரிகளின் காலவரையற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி கலப்புரா, வயநாடு மாவட்டத்தில் உள்ள சிரோ மலபார் கதோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இதையடுத்து நேற்று காலை கொச்சியில் இருந்து வயநாடுக்கு வந்த கன்னியாஸ்திரி லூசியை தேவாலய பணிகளில் ஈடுபட வேண்டாம் என சர்ச் நிர்வாகம் தெரிவித்திருந்தது. எந்த வித எழுத்துப்பூர்வ அறிவிப்பும் இன்றி வாய்மொழியாக தன்னை தேவாலய பணிகளில் ஈடுபட கூடாது என நிர்வாகம் தெரிவித்ததாக லூசி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பலதரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.

    இந்நிலையில், கன்னியாஸ்திரி லூசி கலப்புரா மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தேவாலய நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. #Kerala #KeralaNun 
    Next Story
    ×