search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் - அமித் ஷா
    X

    கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் - அமித் ஷா

    உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக தொடர்ந்து நீடிப்பார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #ManoharParrikar
    புதுடெல்லி :

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்களின் அலோசனைப்படி கடந்த 15-ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நலம் வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து, கோவா மாநில முதல்வர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே கவர்னரிடம் சென்று காங்கிரஸ் ஆட்சிமைக்க உரிமை கோரியது.

    இந்நிலையில், கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘கோவா மாநில முதல்வர் பதவியில் மனோகர் பாரிக்கர் நீடிப்பார். ஆனால் மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படும். மந்திரிகளின் துறைகள் மாற்றப்படும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #AmitShah #ManoharParrikar
    Next Story
    ×