search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் கோயில் வக்கீலான மோடி முஸ்லிம் விதவைகளுக்காக வாதாடுகிறார் - பிரவின் தொகாடியா பாய்ச்சல்
    X

    ராமர் கோயில் வக்கீலான மோடி முஸ்லிம் விதவைகளுக்காக வாதாடுகிறார் - பிரவின் தொகாடியா பாய்ச்சல்

    ராமர் கோயிலை கட்டுவோம் என்ற வாக்குறுதியை நம்பி மோடியை ஆட்சியில் அமரவைத்தால் பிரதமரான பின்னர் முஸ்லிம் விதவைகளுக்கான வக்கீலாகி வாதாடுகிறார் என பிரவின் தொகாடியா குறிப்பிட்டுள்ளார்.
    லக்னோ:

    விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவர் பிரவின் தொகாடியா. இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்று கொண்டவரான இவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அந்தர்ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்னும் புதிய அமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று வருகிறார்.

    அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நகரில் இருந்து அக்டோபர் மாதம் 21-ம் தேதி முதல் அயோத்தி நோக்கி நடைபயணம் செல்வோம் என பிரவின் தொகாடியா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், படவுன் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரவின் தொகாடியா, ‘ராமர் கோயிலை கட்டுவோம் என்ற வாக்குறுதியை நம்பி மோடியை ஆட்சியில் அமரவைத்தால் பிரதமரான பின்னர் முஸ்லிம் விதவைகளுக்கான வக்கீலாகி வாதாடுகிறார்’ என தெரிவித்துள்ளார்.



    காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்குவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது ஆகியவற்றுக்காக இந்த நாட்டு மக்கள் மோடியை பிரதமர் பதவியில் அமர வைத்தனர். ஆனால், அவர் கோயிலுக்கு செல்வதற்கு பதிலாக மசூதிகளுக்குப் போக ஆரம்பித்து விட்டார்.

    காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கல் வீசி கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாதாடும் மோடி, நாட்டின் பாதுகாப்புக்காக கடமையாற்றும் நமது ராணுவ வீரர்களையும், ராமர் கோயிலையும் மறந்து விட்டார்.

    ராமர் கோயில் வக்கீலாக அனுப்பப்பட்ட அவர் (முத்தலாக் ஒழிப்பு அவசர சட்டம் இயற்றியதன் மூலம்) முஸ்லிம்களின் மனைவியருக்கு வக்கீலாக மாறி விட்டார். இந்த நாட்டில் விவசாயிகளும், இளைஞர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது என்றும் பிரவின் தொகாடியா குறிப்பிட்டார்.  #Ramtemple #PravinTogadia
    Next Story
    ×