search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழா - 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்
    X

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழா - 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்

    திருப்பதி பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான 13-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 6 நாட்கள் மொத்தம் 16 லட்சத்து 16 ஆயிரம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. #Tirupati #Brahmotsavam
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அன்னதானத்திட்ட அதிகாரி வேணுகோபால் கூறியதாவது:-

    பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம், குடிநீர், மோர், காபி, டீ, பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. திருமலையில் உள்ள தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 12 மணிவரை அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதுதவிர திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 1,2,3,4 ஆகியவற்றில் நிரந்தரமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகள் அருகில், தரிசன கவுண்ட்டர்கள், நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகள், திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் கதம்பம், சாம்பார், தயிர், புளிசாதம், உப்புமா ஆகிய உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆக மொத்தம் பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் 1 லட்சம் பக்தர்களுக்குமேல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான 13-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 6 நாட்கள் மொத்தம் 16 லட்சத்து 16 ஆயிரம் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று 5 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்களுக்கு உணவும், 3 லட்சம் மோர் பாக்கெட்டுகளும், 3 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. தினமும் 10 டன் காய்கறிகளை பக்தர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை 7 நாட்களாக மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 826 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். #Tirupati #Brahmotsavam

    Next Story
    ×