search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் கோவில் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்
    X

    ராமர் கோவில் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்

    ராமர் கோவில் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளார். #MohanBhagwat #RSS

    புதுடெல்லி:

    அயோத்தி ராமர் கோவில் போராட்டங்கள் தொடர்பாக எழுத்தாளர் ஹேமந்த் சர்மா எழுதிய 2 புத்தகங்கள் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அயோத்தியில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டது என்பது உண்மையான சம்பவம். இதை அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ராமர் கடவுள் என்பது இந்துக்களின் அடையாளம். அது இந்துக்களின் நம்பிக்கை.

    இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. அப்படி கேட்பதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    அயோத்தியில் ராமர் கோவில் தாமதம் இல்லாமல் கட்டப்பட வேண்டும் என்பதை இந்த நாடே விரும்புகிறது. அப்படி ராமர்கோவில் கட்டப்பட்டு விட்டால், இந்து - முஸ்லிம்களிடையே உள்ள கருத்து வேற்றுமைகள் மறைந்து விடும்.

    ராமர் கோவில் தொடர்பான வழக்கு தீர்ப்புகளை விரைவாக வழங்க வேண்டும். நீண்ட காலத்திற்கு இழுத்து கொண்டு செல்லக்கூடாது. இந்த சமூகம் தான் முதன்மையானது. அவர்களுக்கு உண்மையும், நீதியும் கிடைக்க வேண்டும்.


    மதநம்பிக்கைகள் மீது கேள்வி எழுப்பக்கூடாது. அது பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    இவ்வாறு மோகன்பகவத் பேசினார்.

    பாரதிய ஜனதா அமித்ஷா பேசும்போது, ராமர் கோவில் விவகாரத்தில் 500 ஆண்டுகளாக மவுன போராட்டம் நடந்து வருகிறது. ராமஜென்ம பூமி போராட்டம் தான் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய போராட்டம் ஆகும்.

    அங்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டியது அனைவரின் விருப்பம். அயோத்தியில் கடந்த காலத்தில் நடந்த சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது என்பதற்கு சாட்சியமாக உள்ளது என்று கூறினார்.

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசும் போது, அயோத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு அனைத்து சமூகத்தினரும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×