search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வென்று காங்கிரஸ்  ஆட்சி அமைக்கும் - சச்சின் பைலட் நம்பிக்கை
    X

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் - சச்சின் பைலட் நம்பிக்கை

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வென்று காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என மாநில தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். #RajasthanElections #Congress #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக வசுந்தரா ராஜே சிந்தியா பதவி வகித்து வருகிறார்.

    இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற  உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கலந்து கொண்டார். அப்போது அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.   



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும். இந்த ஆட்சியை உங்களது ஆட்சி போன்று நீங்கள் உணர்வீர்கள்.

    ராஜஸ்தானில் தினமும் 8 முதல் 10 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தலித்துகளுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

    முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா நடத்தும் கவுரவ யாத்திரை மிக பெரிய தோல்வியில் முடிந்துள்ளது. மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. கடந்த தேர்தலில் மக்கள் தந்த அரிய வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் மக்களை ஏமாற்றி விட்டார் என தெரிவித்துள்ளார். #RajasthanElections #Congress #SachinPilot
    Next Story
    ×