search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூடநம்பிக்கையால் 17 ஆண்டாக வளர்த்த நீண்ட ஜடை முடியை வெட்டிய பெண்
    X

    மூடநம்பிக்கையால் 17 ஆண்டாக வளர்த்த நீண்ட ஜடை முடியை வெட்டிய பெண்

    புனேவை சேர்ந்த பெண் ஒருவர் மூடநம்பிக்கை காரணமாக 17 ஆண்டாக வளர்த்த நீண்ட ஜடை முடியை கவுன்சிலிங்க்கு சென்ற பின்னர் முடியை வெட்டி உள்ளார்.
    புனே:

    புனேயை சேர்ந்தவர் கலாவதி பர்தேஷி 50 வயதான அவர் 17 ஆண்டாக கூந்தலை வெட்டாமல் வளர்த்து வந்தார். இதனால் அவரது கூந்தல் நன்றாக வளர்ந்து நீளமாக ஒன்றோடு ஒன்றாக பின்னி ஜடையாக இருந்தது.

    அவர் கூந்தல் ஜடை முடியை வெட்டுவது நல்லதல்ல என்றும் ஜடையை வெட்டினால் தெய்வ குற்றம் ஏற்படும் என்றும் பயந்து வெட்டாமல் வளர்த்து வந்தார்.

    இதையறிந்த மகாராஷ்டிரா அனந்தபுரந்தா நிர்மூலன் சமிதி அமைப்பினர் கலாவதி பர்தேஷியிடம் பேசினர். அவரிடம் கூந்தலை வெட்டுவதால் தெய்வ குற்றம் எதுவும் ஏற்படாது? என்று கவுன்சிலிங் வழங்கினர்.

    இதை ஏற்று கொண்டு நீண்ட கூந்தலை வெட்ட கலாவதி பர்தேஷி சம்மதித்தார். ஆனால் தன் ஜடை முடியை தானே வெட்ட பயந்த கலாவதி பர்தேஷி சலூன் கடையை அணுகினார்.

    ஆனால் ஜடை முடியை வெட்டி அகற்ற ரூ.60 ஆயிரம் கேட்டனர். இதையடுத்து கலாவதி பர்தேஷியே தனது ஜடை முடியை வெட்டினார். சுமார் 4 அடி நீள முடியை வெட்டி எடுத்தார்.

    எனது நீண்ட ஜடை முடியால் தவித்து வந்தேன். எனது உறவினர்கள் என்னிடம் பேச மறுத்தனர். எனக்கு வேலை கொடுத்தால் அவர்களுக்கு சாபம் ஏற்படும் என்று கூறி வேலை அளிக்க மறுத்தனர்.

    மேலும் உடல் ரீதியாகவும் தொல்லை இருந்தது. படுத்து தூங்குவதிலும் பிரச்சினை ஏற்பட்டது என்றார்.

    மகாராஷ்டிரா அனந்த புரந்தா, நிர்மூலன் சமிதி அமைப்பினர் மூடநம்பிக்கையை போக்குவதற்காக செயல்பட்டு வருகிறது. அவர்கள் இதுவரை புனே மாவட்டத்தில் 75 பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து ஜடை முடியை அகற்றி உள்ளனர்.

    இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்த நந்தினி ஜாதவ் கூறும்போது, சமூக ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் இது போன்று ஜடை முடி வளர்க்கிறார்கள். அவர்களை ஜடை முடியை வெட்ட சம்மதிக்க வைப்பதற்கு 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை கவுன்சிலிங் கொடுக்க வேண்டியது உள்ளது என்றார்.
    Next Story
    ×