search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி
    X

    மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி

    மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000 விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். #MumbaiAhmedabad #BulletTrain #FarmersProtest
    ஆமதாபாத்:

    மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும், புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000 விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த திட்டத்துக்காக நிலம் எடுப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்பதால், வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன.

    இதுபற்றி விவசாயிகள் தரப்பு வக்கீல் ஆனந்த் யாக்னிக் கூறும்போது, “பதில் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கேட்பதால் கடந்த 5 வாரங்களாக இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரிக்க முடியவில்லை. எனவே ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த 1,000 விவசாயிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டை நாடி, இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோருவோம். மேலும் புதன்கிழமையன்று (இன்று) இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முறையிடுவோம்” என்று கூறினார்.  #MumbaiAhmedabad #BulletTrain #FarmersProtest 
    Next Story
    ×