என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகள் இல்லாத கிராமங்கள் - இந்தியா முழுவதும் 13511, உத்தரப்பிரதேசம் 3474, மிசோரம் 0
Byமாலை மலர்18 Sep 2018 4:34 PM GMT (Updated: 18 Sep 2018 4:34 PM GMT)
இந்தியா முழுவதும் உள்ள சுமார் 7.71 லட்சம் கிராமங்களில் 13 ஆயிரம் கிராமங்களில் பள்ளிகள் இல்லை என ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #India #VillageSchools
புதுடெல்லி:
நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை. மற்ற மாநிலங்களை விட வடகிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. மிசோரமில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன.
பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 107452 கிராமங்களில் 3474 கிராமங்களில் பள்ளிகள் இல்லை, அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 1493 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. அடுத்து மேற்கு வங்க மாநிலம் 1277 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. தொடர்ந்து கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை , மத்திய பிரதேசம் ராஜஸ்தான் முறையே 1025 மற்றும் 1000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.
தென்னிந்தியாவில் கேரளாவில் தான் 1553 கிராமங்களில் 3 கிராமங்களில் மட்டும் பள்ளிகள் இல்லை. தமிழகத்தில் 170891 கிராமங்களில் 47 கிராமங்களில் மட்டும் தான் பள்ளிகள் இல்லை.
தெலுங்கானாவில் 10434 கிராமங்களில் 55 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. ஆந்திராவில் 28293 கிராமங்களில் 154 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.
Next Story
×