search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு தடை கோரி மனு - ஒத்திவைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்
    X

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு தடை கோரி மனு - ஒத்திவைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதால் ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வேண்டி அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #RafaleDeal #SupremeCourt
    புதுடெல்லி:

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய விமான படைக்கு ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பரான அனில் அம்பானிக்கு பெரிய அளவில் பலன் இருப்பதாகவும் காங்கிரஸ் வெளிப்படையாக விமர்சித்து வருகிறது.

    இந்நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் டெஹ்சீன் பூனவல்லா மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதால் அதற்கு தடை விதிக்குமாறும், மேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தது.



    அதே போல், ரபேல் போர் விமான விவகாரத்துக்கான மொத்த தொகை குறித்து பாராளுமன்றத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மனு மீதான விசாரணையின் போது, காங்கிரஸ் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, வழக்கு குறித்து கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். #RafaleDeal #SupremeCourt
    Next Story
    ×