search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் - பாஜக தலைமை அறிவிப்பு
    X

    கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் - பாஜக தலைமை அறிவிப்பு

    உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கர் கோவா முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ManoharParrikar #GoaCM #VinayTendulkar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் நேற்று மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

    கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் பனாஜியில் நிருபர்களிடம் கூறுகையில், மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. 

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கரை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்று பார்த்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில்,  மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் தெரிவித்த கருத்துக்கு இன்று பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்துள்ளார். #ManoharParrikar #GoaCM #VinayTendulkar
    Next Story
    ×