search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது - மம்தா பானர்ஜி காட்டம்
    X

    நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது - மம்தா பானர்ஜி காட்டம்

    நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று குற்றம்சாட்டியுள்ளார். #Mamata Banerjee
    கொல்கத்தா :

    மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது :-  

    இன்று சர்வதேச ஜனநாயக தினம், ஆனால் நமது நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை நோக்கி செல்வது எனக்கு வேதனை ஏற்படுத்துகிறது. எனவே, நமது நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றினைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த மம்தா, 2014-ம் ஆண்டு 31 சதவிகித வாக்குகளை பெற்று பாஜக மத்தியில் ஆட்சியமைத்து போல் 2019-ம் ஆண்டு மீண்டும் நடக்காது என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #Mamata Banerjee
    Next Story
    ×