search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மையே உண்மையான சேவை திட்டம் - பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த பிரதமர் மோடி
    X

    தூய்மையே உண்மையான சேவை திட்டம் - பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த பிரதமர் மோடி

    டெல்லியில் உள்ள பாபா சாகிப் அம்பேத்கர் நடுநிலைப்பள்ளியில் தூய்மையே உண்மையான சேவை திட்டத்தின் அடிப்படையில், பள்ளி வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். #SwachhataHiSeva #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தற்போது காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.



    இந்த திட்டத்தினை பரப்பும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவின் தலைவர்கள் பலர் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், பிரதமர் மோடியும், தலைநகர் டெல்லியில் உள்ள பாபா சாகிப் அம்பேத்கர் நடுநிலைப்பள்ளியில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டார்.

    பள்ளியின் வளாகத்தில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிரதமர் மோடி, அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். #SwachhataHiSeva #PMModi
    Next Story
    ×