search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை வழக்கில் மீண்டும் விசாரணை- சித்துவுக்கு புதிய சிக்கல்
    X

    கொலை வழக்கில் மீண்டும் விசாரணை- சித்துவுக்கு புதிய சிக்கல்

    சித்து மீதான கொலை வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. #NavjotSinghSidhu
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து. தற்போது பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியாக உள்ளார்.

    1988-ம் ஆண்டு பாட்டியாலாவில் சித்துவும், அவரது நண்பர் ரூபிந்தர் சாந்தும் காரில் சென்றபோது மற்றொரு காரில் வந்த குர்னாம் சிங்குடன் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் காயம் அடைந்த குர்னாம்சிங் இறந்தார்.

    இந்த வழக்கில் சித்து, ருபிந்தர்சிங் ஆகியோரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு சித்து, ரூபிந் தர்சிங்குக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து சித்து, ரூபிந்தர் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு கடந்த மே மாதம் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு ஜெயில் தண்டனையை ரத்து செய்தது.

    சித்துவுக்கு ரூ.1000 அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பு அளித்தது. ரூபிந்தர்சிங்கை விடுதலை செய்தது.

    இந்த நிலையில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி குர்னாம் சிங் குடும்பத்தினர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்சர், சஞ்சய்கிஷான் கவுல் ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தனர். அப்போது ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். இது தொடர்பாக சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.

    30 ஆண்டுகள் நடந்து வந்த வழக்கில் அபராத்துடன் சித்து வெளியே வந்ததால் நிம்மதி அடைந்து இருந்தார். ஆனால் தற்போது தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பதால் அவருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. #NavjotSinghSidhu
    Next Story
    ×