search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனையில் இருந்து திரும்பினார் - வீட்டில் உண்ணாவிரத்தை தொடரும் ஹர்திக் படேல்
    X

    மருத்துவமனையில் இருந்து திரும்பினார் - வீட்டில் உண்ணாவிரத்தை தொடரும் ஹர்திக் படேல்

    படிதார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கிய ஹர்திக் படேல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னரும் உண்ணாவிரத்தை தொடர்கிறார். #HardikPatel #fastforquota
    அகமதாபாத் :

    குஜராத் மாநிலத்தில் படிதார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, படிதார் அனாமத் அந்தோலன் சமிதி தலைவர் ஹர்திக் படேல் கடந்த மாதம் 25-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். 14-வது நாளான கடந்த 7-ந் தேதி, அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார். நேராக அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 16-வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

    ஹர்திக் படேலின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு செல்ல முயன்ற பத்திரிகையாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

    இதற்கிடையே, தனக்கு ஒரு போலீஸ் அதிகாரி கொலை மிரட்டல் விடுத்ததாக ஹர்திக் படேல் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். #HardikPatel #fastforquota                           
    Next Story
    ×