search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன அழுத்தத்தால் அவதி - லாலு மருத்துவமனையில் அனுமதி
    X

    மன அழுத்தத்தால் அவதி - லாலு மருத்துவமனையில் அனுமதி

    சிறையில் இருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மனஅழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav
    ராஞ்சி:

    ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் பீகார் முதல்- மந்திரியாக பதவி வகித்த போது கால்நடை தீவனம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    ஒரு சில வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு கடந்த மே மாதம் 6 வார காலம் ஜாமீன் வழங்கியது. பின்னர் மீண்டும் ஜாமீன் நீட்டிக்கப்பட்டு காலக்கெடு முடிந்தது. இதையடுத்து கடந்த 30-ந் தேதி அவர் சரணடைந்தார்.

    இந்த நிலையில் சிறையில் இருக்கும் லாலுவுக்கு லேசான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மனநல மருத்துவரின் உதவி தேவைப்படுவதால் அவர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் அறிவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அந்த மருத்துவமனை இயக்குனர் ஆர்.கே. ஸ்ரீவத்சவா கூறியதாவது:-

    லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தது. இதை தொடர்ந்து டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் லேசான மன அழுத்தம் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மனநல சிறப்பு மருத்துவர்களின் உதவிக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #laluprasadyadav
    Next Story
    ×