search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் மட்டும் ரூ.11 லட்சம் கோடி சம்பாதித்த மத்திய அரசு
    X

    பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் மட்டும் ரூ.11 லட்சம் கோடி சம்பாதித்த மத்திய அரசு

    மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் ரூ.11 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என முன்னாள் மத்திய மந்திரியும் அனைத்திந்திய காங்கிரஸ் விளம்பர கமிட்டி உறுப்பினருமான பக்தா சரண் தாஸ் தெரிவித்துள்ள்ளார். #FuelPrice #BhaktaCharanDas
    புவனேஷ்வர்:

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.



    இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் ரூ. 11 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது  என முன்னாள் மத்திய மந்திரியும் அனைத்திந்திய காங்கிரஸ் விளம்பர கமிட்டி உறுப்பினருமான பக்தா சரண் தாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா  எண்ணெய் ஒரு ஒரு பேரல் 107.09 அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது நாங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலை 71.41 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 55.49 ரூபாய்க்கும் விற்பனை செய்தோம். 

    தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 77 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை 79.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 77.80 ரூபாய்க்கு விற்கிறீர்கள். இது சரியா?

    மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் 11லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  #FuelPrice #BhaktaCharanDas
    Next Story
    ×