search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு - தர்மேந்திர பிரதான்
    X

    அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு - தர்மேந்திர பிரதான்

    பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு காரணம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவது தான் என மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். #DharmendraPradhan #FuelPrice #BharatBandh
    புதுடெல்லி :

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. 

    ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளதாவது :-

    அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை நோக்கி செல்வதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட வேண்டும். 

    விலையேற்றத்தால் மக்களின் பிரச்னையை உணர்கிறோம். பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட்ட பின்னர் அனைவரும் பயனடைவார்கள். கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக ஈரான், வெனிசுலா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் கூறியபோதும் அதை அவர்கள் செய்யவில்லை. இது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #DharmendraPradhan #FuelPrice #BharatBandh
    Next Story
    ×