search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை விமர்சித்து ட்வீட் - தன் அட்மின் மீது போலீசில் புகாரளித்த பாஜக முன்னாள் எம்.பி
    X

    மோடியை விமர்சித்து ட்வீட் - தன் அட்மின் மீது போலீசில் புகாரளித்த பாஜக முன்னாள் எம்.பி

    பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜயின் ட்விட்டர் கணக்கில் இருந்து நேற்றிரவு மோடியை விமர்சித்து ட்வீட் போடப்பட்ட நிலையில், தனது அட்மின் மீது அவர் போலீசில் புகாரளித்துள்ளார். #TarunVijay
    டேராடூன்:

    பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் நேற்று, ராகுல் காந்தியின் கைலாஷ் யாத்திரையை ஆதரித்து முதலில் ட்வீட்கள் இடப்பட்டன. இந்த ட்வீட்கள் அனைவராலும் பகிரப்பட்டன. சிறிது நேரத்திற்கு பின்னர் மோடியை நேரடியாக விமர்சித்து ட்வீட்கள் வெளியானது.

    இதனால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவரது கணக்கு தற்காலிகமாக முடங்கி சிறிது நேரத்திற்கு பின் சரியானது. சர்ச்சைக்குரிய ட்வீட்கள் நீக்கப்பட்டிருந்தன. 



    “2019ம் ஆண்டு வரப்போகும் தேர்தல்களை முன்னொட்டியே இது போன்ற விரோத மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறார்கள்” என்று வருத்தத்தினை பதிவு செய்துள்ள தருண் விஜய், “நானும் என் குடும்பத்தினரும் வாழ்நாள் முழுவதும் பாஜகவிற்கும், மோடி மற்றும் அமித் ஷாவிற்கும் கடமைப்பட்டவர்கள். காலை முதல் இரவு வரை அவர்களுக்காகவே நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது போன்ற இக்கட்டான நிலையில் என்னை நம்பிய, எனக்கு உறுதுணையாய் செயல்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி” என கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டார்.

    “நேற்று பத்து மணியில் இருந்து பதிவு செய்த ட்விட்டர் பதிவுகள் அனைத்தையும் நீக்கி, புதிய கடவுச்சொல்லினை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என குறிப்பிட்ட அவர் தன் அட்மின் மீது போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×