search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன - அமித் ஷா
    X

    பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன - அமித் ஷா

    கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் நகர்ப்புறங்களில் பாஜக வென்றுள்ளதற்கு, பொதுமக்கள் ஆதரவே காரணம் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #KarnatakaLocalBodyElection2018 #BJP #AmitShah
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமோகா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்டு 31-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67.51 சதவீத ஓட்டுகள் பதிவாயின. 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மொத்தம் 2709 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அறிவிக்கப்பட்ட 2664 இடங்களில், காங்கிரஸ் 982 இடங்களையும், பாஜக 929 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 307 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

    நகர்ப்புறங்களில் பாஜக அதிக இடங்களில் பாஜகவும், கிராமப்புறங்களில் காங்கிரசும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்நிலையில், கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் நகர்ப்புறங்களில் பாஜக வென்றுள்ளதற்கு, பொதுமக்கள் ஆதரவே காரணம் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. அவர்கள் கொடுத்து வரும் தொடர் ஆதரவால் பாஜகவுக்கு நிறைய இடங்கள் பெற்றுள்ளன. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆட்சி அமைந்தால் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார். #KarnatakaLocalBodyElection2018 #BJP #AmitShah
    Next Story
    ×